Thursday, December 31, 2020

குரு ரமண மகரிஷி

சரணாகதி

மனமென்னும் துயரின் போக்கில் 
தினம் தினமும் தவித்ததனால்  
அத்தனவன் சிவனை அண்டி 
சித்தமதின் எண்ண அலைகள் 
நீங்கி மனமமைதி கொள்ள 
உத்தம குரு வேண்டும் என்றேன்   
விமலன் அவன் கருணை அதனால் 
ரமணன்  என்னுள் குருவாய் உதித்து 
தன்னைத் தான் அறிந்திடவே என்றும் 
தன்னுடனே இருக்கப் பணித்தார்  
குருவாக்கே திருவாக்காய் சடுதியிற் 
சரண் அடைந்தேன் ரமணபதம் 
ராமணதாசனிவன் மாயப் பிறப்பறுத்திடவே     

சிந்தையழித்தல்

எந்தையாம் ஈசனவன்  அகத்தே குருவாயுதித்து
நான் சிந்தையற என்னுள் நிலைத்தபோது 
முந்தை வினைப்பயன் வேரொடு அறுத்து 
விந்தையாய் என்னுள்  இரண்டறக் கலந்திடுவன் 

No comments:

Post a Comment